ஆந்­தி­ரா­: விடுதியில் தீ விபத்து: கொவிட்-19 நோயாளிகள் உட்பட 11 பேர் பலி

ஆந்­தி­ரா­: விடுதியில் தீ விபத்து: கொவிட்-19 நோயாளிகள் உட்பட 11 பேர் பலி

2 mins read
26323292-6384-46ff-a057-02e4377c0bcc
தீ விபத்து நிகழ்ந்த தங்கும் விடுதியில் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோர் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது ஆந்திர அரசு.படம்: ராய்ட்டர்ஸ் -

விஜ­ய­வாடா: கொரோனா பரா­மரிப்பு மைய­மா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட தங்கும் விடு­தி­யில் ஏற்­பட்ட திடீர் தீ விபத்­தில் சிக்கி ஏழு பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர். இச்­சம்­ப­வம் ஆந்­தி­ரா­வில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

நாடு முழு­வ­தும் அதி­க­ரித்து வரும் கொவிட்-19 நோயா­ளி­களை தங்க வைக்­க­வும் சிகிச்சை அளிக்­க­வும் பல்­வேறு பகு­தி­களில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் போது­மான படுக்கை வச­தி­கள் இல்லை.

இதை­ய­டுத்து தங்­கும் விடு­தி­கள், மக்­கள் நல்­வாழ்வு மையங்­கள் ஆகி­ய­வற்­றில் பலர் தங்க வைக்­கப்­ப­டு­கின்­ற­னர். மேலும், மருத்­து­வர்­களும் தாதி­ய­ரும் வீடு திரும்­பு­வ­தற்­குப் பதி­லாக தங்­கும் விடு­தி­களில் தற்கா­லி­க­மாக தங்­கு­கின்­ற­னர்.

ஆந்­திர மாநி­லம், விஜ­ய­வாடா நக­ரில் உள்ள ஒரு தங்­கும் விடு­தி­யும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கும் தற்­கா­லிக மருத்­து­வ­மனை மற்­றும் பரா­ம­ரிப்பு மைய­மா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்தது. அங்கு 22 நோயா­ளி­கள் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில் நேற்று காலை சுமார் ஐந்து மணி­ய­ள­வில் இந்த விடு­தி­யில் திடீர் தீ விபத்து ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து நோயா­ளி­களை உட­னுக்­கு­டன் வெளி­யேற்ற சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் முயற்சி செய்­த­னர். எனி­னும் தீ வேக­மா­கப் பர­வி­ய­தில் நோயா­ளி­கள் உள்­ளிட்ட பலர் சிக்­கிக்கொண்­ட­னர்.

ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து சில நோயாளிகள் கீழே குதித்து தப்பினர்.

தக­வ­ல­றிந்து வந்த தீய­ணைப்பு மற்­றும் மீட்­புப் படை­யி­னர் கடு­மை­யா­கப் போராடி பலரை மீட்­ட­னர். எனி­னும் ஏழு நோயாளிகள் உட்பட 11 பேர் தீயில் கருதி பரிதா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில் மின்­க­சி­வால் இந்த விபத்து ஏற்­பட்­டி­ருக்­க­லாம் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

பலி­யா­னோர் குடும்­பங்­க­ளுக்கு ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி ஆழ்ந்த இரங்­கல் தெரி­வித்­துள்­ளார். இந்­நி­லை­யில் ஆந்­திர அர­சுக்கு தேவைப்­படும் அனைத்து உத­வி­களை­யும் மத்­திய அரசு செய்­யும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா கூறி­யுள்­ளார்.

கடந்த வாரம் குஜ­ராத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சை பிரி­வில் ஏற்­பட்ட தீ விபத்­தில் எட்டு கொரோனா நோயா­ளி­கள் உயிரிழந்த­னர்.