101 பொருட்கள் இறக்குமதிக்கு தற்காப்புத்துறை தடை

2 mins read
3ae47b0f-1ae8-451e-87c6-b80ea7d4fd34
ராஜ்நாத் சிங். படம்: ஊடகம் -

துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்புடைய பொருட்களை வாங்க இயலாது

புது­டெல்லி: தற்காப்­புத்­து­றை­யு­டன் தொடர்­புள்ள 101 பொருட்­களை இறக்­கு­மதி செய்ய மத்­திய அரசு தடை விதித்­துள்­ளது.

இதை­ய­டுத்து பீரங்கி துப்­பாக்கி­கள், ரேடார் கரு­வி­களை இனி இந்­தியா எந்த நாட்­டில் இருந்­தும் இறக்­கு­மதி செய்ய இய­லாது. இத்­த­க­வலை தற்காப்­புத்­துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் நேற்று தெரி­வித்­தார்.

'தற்­சார்பு இந்­தியா' திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தில் மத்­திய அரசு தீவி­ர­மாக உள்­ளது. இறக்­கு­மதி அள­வைக் குறைக்க வேண்­டும் என­வும் வலி­யு­றுத்தி வரு­கிறது.

கொரோனா கிருமி விவ­காரம் முடி­வுக்கு வந்­த­தும், 'தற்­சார்பு இந்­தியா' திட்ட நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­படும் எனப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

இத்­த­கைய சூழ­லில், வெளி­நா­டு­களில் இருந்து பாது­காப்­புத் துறைக்­காக இறக்­கு­மதி செய்­யப்­படும் 101 பொருட்­க­ளுக்கு தடை விதிப்­ப­தாக அத்­து­றை­யின் அமைச்­சர் ராஜ்­நாத் சிங் புது­டெல்­லி­யில் நேற்று அறி­வித்­தார்.

'தற்­சார்பு இந்­தியா' திட்­டத்தை ஊக்­கு­விக்­கும் வித­மாக இத்­தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

பல்­வேறு துறை­க­ளு­டன் நடத்­தப்­பட்ட ஆலோ­ச­னை­யின் முடி­வில் மத்­திய அரசு இத்­த­கைய முடிவை எடுத்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், உள்­நாட்­டி­லேயே தேவை­யான அளவு உற்­பத்தி செய்­யும் திறன் கொண்ட பொருட்­கள் மட்­டுமே தடைக்­கான பட்­டி­ய­லில் இடம்­பெற்றுள்­ள­தாக தெளி­வு­படுத்தி­னார்.

"இந்த முடி­வை­ய­டுத்து பீரங்கி துப்­பாக்­கி­கள், இலகு ரக துப்பாக்கி­கள், ரேடார் கரு­வி­கள் ஆகி­ய­வற்­றின் இறக்­கு­ம­திக்கு தடை­வி­திக்­கப்­ப­டு­கிறது. இந்த தடையை 2025ஆம் ஆண்­டுக்­குள் முழு­மை­யாக அமல்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது," என்று ராஜ்­நாத் சிங் தெரி­வித்­துள்­ளார்.

இறக்­கு­மதி செய்ய வேண்­டிய மேலும் சில ராணுவ தள­வா­டங்­கள் எதிர்­கா­லத்­தில் கண்­ட­றி­யப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், அவற்றை உற்­பத்தி செய்­வ­தற்­கான ஒப்­பந்­தங்­களை உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கும்­போது சுமார் 4 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­புள்ள பொருட்­களை உள்­நாட்­டி­லேயே பெற முடி­யும் என சுட்­டிக்­காட்­டி­னார்.

தக­வல் தொடர்­புக்­கான செயற்­கைக்­கோள், நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள், இலகு ரக துப்­பாக்­கி­கள் உள்­ளிட்ட பொருட்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான தடை நடப்­பாண்டு டிசம்­பர் மாதம் தொடங்கி 2025ஆம் ஆண்டு வரை படிப்­ப­டி­யாக அமல்­படுத்­தப்­படும்.

கடந்த 2017 ராணு­வத்­துக்­காக அதி­கம் செல­வி­டும் நாடு­க­ளின் பட்­டி­ய­லில் அமெ­ரிக்கா, சீனா­வு­டன் இந்­தி­யா­வும் இடம்­பெற்­றி­ருந்­தது. இதன் மூலம் ஆயு­தங்­கள் மற்­றும் இதர பொருட்­க­ளுக்கு இந்­தியா பிற நாடு­களை எந்­த­ளவு சார்ந்துள்­ளது என்­பது தெரி­ய­வந்­தது.