2.15 மில்லியன் பேர் பாதிப்பு; 43 ஆயிரம் பேர் பலி

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஞாயிற்றுக்­கி­ழமை காலை 10 மணி வரை­யி­லான முந்­தைய 24 மணி நேரத்­தில் சுமார் 64 ஆயி­ரம் பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மேலும் ஒரே நாளில் 861 பேரை கொவிட்-19 பலி வாங்­கி­யுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 2.15 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ளது. சுமார் 43 ஆயி­ரம் பேர் பலி­யா­கி­யுள்­ள­னர்.

சிகிச்­சைக்­குப் பின்­னர் 1.42 மில்­லி­யன் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர் என்­றும் குண­ம­டைந்­தோர் விகி­தம் 68.32 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது என்­றும் சுகா­தார அமைச்­சின் அறிக்கை தெரி­விக்கிறது.

நாடு முழு­வ­தும் 20.33 மில்லியன் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மையம் தெரி­வித்­துள்­ளது. மேலும், இறப்பு விகி­தம் 2.04 விழுக்­கா­டாக குறைந்­துள்­ளது.

இதற்­கி­டையே கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக நாடு முழு­வ­தும் உள்ள காய்­க­றிக் கடைக்­கா­ரர்­கள், தொழி­லா­ளர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்றை கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னையை நடத்த வேண்­டும் என மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

நாடு முழு­வ­தும் கடந்த ஒரு வாரத்­தில் மட்­டும் சுமார் 3.5 லட்­சம் பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!