தெலுங்கானா அமைச்சருக்கு 'கொவிட்-19'

தெலுங்கானா அமைச்சருக்கு 'கொவிட்-19'

1 mins read
0c2280de-c92a-42e6-849f-740e54cd5b85
தெலுங்கானா மாநில தொழில்துறை அமைச்சர் மல்லா ரெட்டி. படம்: ஃபேஸ்புக் -

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில தொழில்துறை அமைச்சர் மல்லா ரெட்டிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே ஜூலை 26ஆம் தேதி ஆந்திராவில் நடைபெற்ற பிரபல தெலுங்கு நடிகர் நிதினின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கிருமித்தொற்று இருந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு நிலவி வருகிறது.