இந்தியா: புத்தர் நேப்பாளத்தில் பிறந்ததை மறுக்கவில்லை

இந்தியா: புத்தர் நேப்பாளத்தில் பிறந்ததை மறுக்கவில்லை

1 mins read
7868febf-21f8-403e-be18-b5de1584b61e
-

புத்தரின் பிறப்பிடம் குறித்த சர்ச்சையை இந்தியா மட்டுப்படுத்தியுள்ளது. நேப்பாளத்தின் லும்பினியில்தான் புத்த மதத்தை நிறுவிய சித்தார்த்த கௌதமர் நேப்பாளத்தில் பிறந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இணையம் வழியாக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட மாநாடு ஒன்றின்போது உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கர், புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் போதனைகள் காலத்தால் அழியாதவை என்று தெரிவித்தார். ஆயினும், புத்தரை திரு ஜெயசங்கர் 'இந்தியர்' என அதே உரையில் குறிப்பிட்டதாக நேப்பாள ஊடகங்கள் கூறி வந்தன. இதனைத் தொடர்ந்து நேப்பாள வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்தது.

இந்தியாவும் நேப்பாளமும் இணையாகப் பகிரும் பௌத்த பாரம்பரியத்தைப் பற்றிதான் திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டதாகவும் புத்தர் இந்தியாவில் பிறந்ததாக அவர் கூறவில்லை என்றும் அமைச்சின் பேச்சாளர் அனுரங் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக ராமர் நேப்பாளத்திலுள்ள அயோத்யாபுரி என்ற ஊரில் பிறந்ததாக அந்நாட்டின் அமைச்சர் கே.பி ஷர்மா ஒலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.