சுடச் சுடச் செய்திகள்

கழிவுநீர்த் தொட்டியை சுத்தப்படுத்திய 6 பேர் பலி

ராஞ்சி: கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சோகம் நீடித்து வரும் நிலையில், ஜார்க்கண்டில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று அங்குள்ள தியோகார் பகுதியில் உள்ள வீட்டில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் இருவரும் தொட்டிக்குள் சுருண்டு விழுந்து இறந்தனர். 

இதைக்கண்ட வீட்டு உரிமையாளரின் இரு மகன்களும் தொட்டிக்குள் இறங்க, அவர்களையும் விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக பலியாகினர்.
இதனால் கடும் அதிர்ச்சி  அடைந்த வீட்டு உரிமையாளர் அண்டை வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்தார். 

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் தொட்டிக்குள் இறங்கியதில், அவர்களுக்கும் அதே கதி ஏற்பட்டது. 
விஷவாயு அபாயம் இல்லை என்பது உறுதியான பின்னர் ஆறு சடலங்களும் மீட்கப்பட்டன. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon