காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை: சசி தரூர் திடீர் வலியுறுத்து

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை: சசி தரூர் திடீர் வலியுறுத்து

1 mins read
80f78f99-6d3e-484f-9cca-ce925dc4185f
-

புதுடெல்லி: கட்சித் தலைவர் எனும் பொறுப்பை சோனியா காந்தி நீண்ட காலம் சுமக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம் அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். சோனியா இடைக்கால தலைவராகப் பொறுப்பு ஏற்றதை தாம் வரவேற்றதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இனி புதிய தலைவர் கட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.