கிருமித்தொற்று: உலக நாடுகளை வேகமாக முந்தும் இந்தியா

கிருமித்தொற்று: உலக நாடுகளை வேகமாக முந்தும் இந்தியா

2 mins read
45469da2-a59f-42e5-a7b2-9b914e4854c9
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயல்பாட்டாளர்கள் அமைப்பான 'ஆஷா'வின் உறுப்பினர்கள் கொரோனா கிருமி விவகாரம் தொடர்பான தரவுகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலை யில் ஊதிய உயர்வு மற்றும் தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அந்த அமைப்பினர் டெல்லியில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.படம்: இபிஏ -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்­பில் உலக நாடு­களை அடுத்­த­டுத்து முந்தி வரு­கிறது இந்தியா. அன்­றாட கிரு­மித்­தொற்று எண்­ணிக்­கை­யில் முத­லி­டத்­தில் உள்ள அமெ­ரிக்கா, பிரே­சிலை தற்­போது இந்­தியா பின்­னுக்­குத் தள்­ளி­யுள்­ளது.

கடந்த ஐந்து தினங்­க­ளாக இந்தி­யா­வில் அன்­றா­டம் சுமார் 60 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­றார்கள்.

அமெ­ரிக்­கா­வில் சனிக்­கி­ழ­மை­யன்று சுமார் 58 ஆயி­ரம் பேரும் பிரே­சி­லில் சுமார் 50 ஆயி­ரம் பேரும் பாதிக்­கப்­பட்­ட­னர். ஆனால், இந்­தி­யா­வில் கடந்த சில தினங்களாக புது நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 60 ஆயி­ரத்தை கடந்து வரு­கிறது.

கடந்த மூன்று வாரங்­களில் மட்­டும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை பத்து லட்­சம் அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த ஜூலை 17ஆம் தேதி பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 10 லட்­ச­மாக இருந்­தது.

பின்­னர் ஜூலை 31ஆம் தேதி இந்த எண்­ணிக்கை 16 லட்­ச­மாக உயர்ந்­தது. ஆகஸ்ட் 8ஆம் தேதி நாட்­டில் 21 லட்­சம் பேர் கொவிட்-19 நோய்க்கு ஆளா­ன­தாக மத்­திய சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே நாடு முழு­வ­தும் நேற்று முன்­தி­னம் மட்­டும் 7.19 லட்சம் மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன.

ஒவ்­வொரு நிமி­ட­மும் நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் ஐநூறு பேரி­டம் பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது என்­றும், இது­வரை 2.41 கோடி மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்ள­தா­க­வும் சுகா­தார அமைச்­சின் அறிக்கை தெரி­விக்­கிறது.

நாடு முழு­வ­தும் இது­வரை 2.21 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­களில் 44,386 பேர் பலி­யா­கி­யுள்­ள­னர். சுமார் 1.53 மில்லி­யன் பேர் குண­ம­டைந்­துள்ள நிலை­யில், சுமார் 6.30 லட்­சம் பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

முன்­னாள் அதி­பர் பிரணாப் முகர்­ஜிக்கு கிரு­மித்தொற்று

இந்­நி­லை­யில் முன்­னாள் அதி­பர் பிர­ணாப் முகர்­ஜிக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

அதி­க­மான அறி­கு­றி­கள் தென்­படா­த­தால் அவர் தம் வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு சிகிச்சை அளி­க்கப்­பட்டு வரு­வ­தாக தக­வல் வெளி­யா­கி­ உள்ளது.

84 வய­தான பிர­ணாப் முகர்ஜி, வழக்­க­மான பரி­சோ­த­னைக்­காக மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­போதே அவ­ருக்கு கொரோனா கிரு­மி ­தொற்­றி­யது கண்­ட­றி­யப்­பட்­டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.