சுடச் சுடச் செய்திகள்

விபத்து: முன்னாள் விமானிகள் கருத்து

திரு­வ­னந்தபுரம்: விபத்­துக்­குள்­ளான ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் விமா­னத்தை தரை­யி­றக்­கிய வேகத்­தில் மீண்­டும் அதை மேலே கொண்டு செல்ல விமா­னி­கள் முயற்சி செய்தி­ருக்­க­லாம் என முன்­னாள் விமா­னி­கள் சிலர் கரு­து­வ­தாக இந்­திய ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

விமா­னம் சரி­யான முறை­யில் தரை­யி­றங்­க­வில்லை எனக் கரு­தும் பட்­சத்­தில், கடைசி நேரத்­தில் அதை மீண்­டும் மேலே கொண்டு செல்ல இய­லும் என்று அவர்­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

விமா­னத்­தின் இயக்­கம் நிறுத்­தப்­படும் வரை தரை­யி­றங்­கும் நட­வ­டிக்கை முடி­வுக்கு வந்­த­தாகக் கரு­தப்­ப­டாது.

“மழை கார­ண­மாக சூழ்­நிலை சாத­க­மாக இல்­லா­த­தால், விமா­னத்தை மீண்­டும் மேலே கொண்டு சென்று, ஒரு­முறை வட்­ட­மிட்ட பின்­னர் மீண்­டும் தரை­யி­றக்க முயற்­சிக்­க­லாம் என்று விமா­னி­கள் முடிவு செய்­தி­ருக்­க­லாம்.

“ஏனெ­னில் விமா­னி­கள் அறை­யில் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களில் விமா­னத்தை மேலே கொண்டு செல்­வ­தற்­கான கரு­வி­கள் அனைத்­தும் அதற்கு தயார் நிலை­யில் உள்­ளன,” என்று சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர் முன்னாள் விமா­னி­கள்.

இதற்­கி­டையே கோழிக்­கோடு விமான விபத்­தின் போது காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு ரத்­த­தா­னம் செய்ய கேரள மக்­கள் ஏரா­ள­மா­கக் குவிந்­த­னர். விபத்­தில் சிக்­கிய பலர் அரு­கி­லுள்ள மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் சில­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்க ரத்­தம் தேவைப்­ப­டு­வ­தாக தக­வல் பரவியது.

இதை­ய­றிந்த நூற்­றுக்­க­ணக்­கா­னோர் ரத்த தானம் செய்ய முன்­வந்­த­னர். கொட்­டும் மழை­யில், கிருமித்­தொற்று அச்­சத்­தை­யும் மீறி அவர்­கள் கூடி­யி­ருந்­தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon