பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த பணப்பை

மும்பை: பதி­னான்கு ஆண்­டு­க­ளுக்கு முன் ரயி­லில் தவற விடப்­பட்ட ‘பர்ஸ்’ அதன் உரி­மை­யா­ள­ரி­டம் அண்­மை­யில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து உரி­மை­யா­ளர் மும்பை ரயில்வே போலி­சா­ருக்கு நன்றி தெரி­வித்­துள்­ளார்.

மும்­பை­யைச் சேர்ந்த ஹேமந்த் பதால்­கர் என்­ப­வர் கடந்த 2006ஆம் ஆண்டு மும்­பை­யில் மின்­சார ரயி­லில் பய­ணம் செய்­துள்­ளார்.

அப்­போது ரயில் நிலை­யத்­தில் தனது ‘பர்ஸை’ தவ­ற­விட்­டார். இது தொடர்­பாக அச்­ச­ம­யம் ரயில்வே போலி­சில் அவர் புகார் அளித்­தி­ருந்­தார். அதன் பிறகு கால ஓட்­டத்­தில் இந்­தச் சம்­ப­வத்தை மறந்­து­விட்­டார் ஹேமந்த்.

இந்­நி­லை­யில் கடந்த ஏப்­ரல் மாதம் திடீ­ரென ரயில்வே போலி­சா­ரி­டம் இருந்து இவ­ருக்கு தொலை­பேசி அழைப்பு வந்­தது. மேலும், 14 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் அவர் தொலைத்த ‘பர்ஸ்’ கிடைத்­து­விட்­ட­தா­க­வும் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் ஆச்­ச­ரி­ய­ம­டைந்த ஹேமந்த், கொரோனா ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து அண்­மை­யில் ரயில்வே காவல் நிலை­யத்­துக்­குச் சென்­றார்.

அப்­போது அவ­ரது ‘பர்ஸ்’ ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அதில் தாம் வைத்­தி­ருந்த 300 ரூபாய் அப்­ப­டியே இருந்­தது ஹேமந்தை மேலும் வியப்­ப­டை­யச் செய்­தது.

“‘பர்ஸ்’ தொலைந்­த­போது அதில் 900 ரூபாய் வைத்­தி­ருந்­தேன். அதில் 300 ரூபாய் போக, தபால் செல­வுக்­காக நூறு ரூபாய் போலி­சால் பிடித்­தம் செய்­யப்­பட்­டது.

“பழைய 500 ரூபாய் நோட்டை மாற்­றிக் கொடுப்­ப­தா­கக் கூறி­னர். திரும்­பக் கிடைத்­தது பெரிய தொகை இல்­லை­யென்­றா­லும் பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தொலைந்­து­போன ஒரு பொருள் கிடைத்­த­தில் மகிழ்ச்சி,” என்­கி­றார் ஹேமந்த்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!