நம் நாடு இந்தியாவா? 'இந்தி'யாவா? என ஸ்டாலின் கேள்வி

நம் நாடு இந்தியாவா? 'இந்தி'யாவா? என ஸ்டாலின் கேள்வி

1 mins read
a29bf47b-a0d8-4e64-83e6-c9a3f9c80357
டெல்லி விமான நிலையம். படம்: ஊடகம் -

சென்னை: இந்தி தெரியாது என்று சொன்னதால் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், 'நீங்கள் இந்தியரா?' என்று மத்திய பாதுகாப்பு படை பெண் அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தி தெரியாது என்று சொன்னதால் 'நீங்கள் இந்தியரா?' என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழி எம்.பி.யை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? 'இந்தி'யாவா? பன்முகத் தன்மைக்கு புதை குழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவர் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கனிமொழிக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார். சகோதரி கனிமொழிக்கு நேர்ந்த அவமானத்துக்கு எதிராக தான் குரல் எழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.