‘பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு’

சென்னை: பெண்­க­ளுக்கு சொத்­து­ரி­மை­யில் சம­பங்கு வழங்­கு­வது தொடர்­பான வழக்கு ஒன்று விசா­ர­ணைக்கு வந்­த­போது, ஆண் வாரி­சு­க­ளுக்கு வழங்­கு­வது போலவே பெண் வாரி­சு­க­ளுக்­கும் சொத்­தில் சம பங்கு வழங்­க­வேண்­டும் என்று உச்ச நீதி­மன்­றம் நேற்று முன்­தி­னம் தீர்ப்பு வழங்­கி­யது. இந்தத் தீர்ப்பை அர­சி­யல் தலை­வர்­கள் பல­ரும் வர­வேற்­றுள்­ள­னர்.

உச்­ச நீ­தி­மன்­றத்­தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்­ப­தாக முத­ல­மைச்­சர் எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார். சமூக நீதியை காப்­பாற்­றும் வித­மாக வந்­தி­ருக்­கும் இந்த தீர்ப்பு வர­வேற்­கத்­தக்­கது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்

பா.ம.க. நிறு­வ­னர் டாக்­டர் ராம­தாஸ்: பெண்­க­ளின் சொத்­து­ரிமை தொடர்­பான கடைசி தடைக் கல்­லை­யும் தகர்த்து எறிந்­துள்ள தீர்ப்பு வர­வேற்­கத்­தக்­க­தா­கும்.

மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ: உச்ச நீதி­மன்­றம் அளித்­துள்ள தீர்ப்பு, பெரி­யா­ரின் கொள்­கைக்கு கிடைத்த மாபெ­ரும் வெற்றி என்று கூறி­யுள்­ளார்.

திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி மாநிலச் செய­லா­ளர் கே.பாலகிருஷ்­ணன், புதிய நீதிக்­கட்சி தலை­வர் ஏ.சி.சண்­மு­கம், சமத்­துவ மக்­கள் கழ­கத் தலை­வர் ஏ.நாரா­ய­ணன் உள்­பட அர­சி­யல் கட்சி தலை­வர்­கள் தீர்ப்பை வர­வேற்றுள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon