சுடச் சுடச் செய்திகள்

கொவிட்-19 கிருமியைத் தொற்றியவருடன் மேடையில் மோடி

அயோத்தியின் ராம ஜென்மபூமி ஆலயத அறக்கட்டளையின் தலைவர் கொரோனா தொற்றுடன் கடந்த வாரம் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டாதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் ஒரே மேடையில் இருந்ததை ஊடகப் படங்கள் காட்டின.

இம்மாதம் ஐந்தாம்ஆம் தேதி, நடைபெற்ற விழாவில் ஐந்து பேர் மட்டும் நிகழ்ச்சி மேடையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரான அறக்கட்டளைத் தலைவர் மகான்த் நிரித்ய கோபால் தாசுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரதமர் மோடியும் அந்த மேடையில் உடனிருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் அந்த மேடையில் இருந்தனர்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon