வரி செலுத்துவோரை கௌரவிக்க புதிய திட்டம்

புது­டெல்லி: வரி செலுத்­தும் முறை மக்­க­ளுக்கு மிக மிக எளி­மை­யா­ன­தாக இருக்க வேண்­டும் என பிர­த­மர் நரேந்திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

நேர்­மை­யாக வரி செலுத்­து­வோர், நாட்­டின் வரி வசூ­லிப்பு முறை மீது நம்­பிக்­கை கொள்ள வேண்­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

நோ்மையாக வரி செலுத்­து­வோரை கௌர­விக்க மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. இதற்­காக ‘வெளிப்­ப­டை­யான வரி விதிப்பு- நோ்மையா­ன­வரை கௌர­வித்­தல்’ என்ற பெய­ரில் புதிய திட்­டம் அறி­மு­க­மாகி உள்­ளது.

இத்­திட்­டத்தை பிர­தமா் மோடி நேற்று தொடக்கி வைத்­தார். பின்­னர் பேசிய அவர், உரிய நேரத்­தில் வரி செலுத்­து­வோர், நாட்­டின் வளர்ச்­சி­யில் அக்­கறை கொண்­ட­வர்­கள் எனப் பாராட்டினார்.

நாட்­டின் முன்­னேற்­றத்­தில் நேர்மை­யாக வரி செலுத்­து­வோ­ருக்கு முக்­கி­யப் பங்­குள்­ள­தா­க­வும் நியா­ய­மான மற்­றும் எளி­மை­யான வரி விதிப்பு என்­பது நாட்­டின் முக்­கி­யக் கொள்­கை­யாக உள்­ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வரி விதிப்­பில் கொண்டு வரப்­பட்­டுள்ள சீர்­தி­ருத்­தங்­கள் புதிய உச்­சத்தை தொட்­டுள்­ளன. நேர்­மை­யா­ளர்­க­ளைப் பெரு­மைப்­படுத்­தும் திட்­டம் செப்­டம்­பர் முதல் அமல்­ப­டுத்­தப்­படும்.

“வரி முறையை எளி­மைப்­படுத்­து­வ­தன் மூலம், நாட்­டில் வரி செலுத்­து­வோ­ரின் எண்­ணிக்­க அதி­க­ரிக்­கும்,” என்­றார் பிர­த­மர் மோடி.

கடந்த ஆறு ஆண்­டு­களில் வரு­மான வரி அறிக்­கையை தாக்­கல் செய்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை சுமார் இரண்­டரை கோடி அதி­க­ரித்­துள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இதற்­கி­டையே இந்­தப் புதிய திட்­ட­மா­னது நேரடி வரி­கள் சீர்­தி­ருத்த பய­ணத்தை மேலும் முன்­னெ­டுத்து செல்­லும் என நிதி அமைச்சு கூறி­யுள்­ளது.

வரி குறைப்பு மற்­றும் நேரடி வரி சட்­டங்­களை எளி­மைப்­ப­டுத்­து­வது ஆகி­ய­வையே வரி சீர்­தி­ருத்­தங்­க­ளின் நோக்­கம் என்­றும் வரு­மா­ன­வரி கணக்கு தாக்­க­லுக்­கான கால­அ­வ­கா­சம் மேலும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அந்த அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon