மோடி ஆட்சியில் எதுவும் சாத்தியம்: ராகுல் கிண்டல் பதிவு

புது­டெல்லி: பிர­த­மர் மோடி ஆட்­சி­யில் எது­வும் சாத்­தி­ய­மா­கும் என காங்­கி­ரஸ் எம்பி ராகுல்­காந்தி கிண்­ட­லா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

நாட்­டின் மொத்த உள்­நாட்டு வளர்ச்சி வெகு­வா­கப் பாதிக்­கப்­படும் என பொரு­ளா­தார நிபு­ணர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னர் கவலை தெரி­வித்­தி­ருப்­பதை அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

நாட்டு நில­வ­ரங்­கள் குறித்து தொடர்ந்து டுவிட்­ட­ரில் கருத்­து­களை பதி­விட்டு வரு­கி­றார் ராகுல். தற்­போது பொரு­ளா­தார நிலை குறித்து அவர் பதி­விட்­டுள்­ளார்.

இந்­தி­யா­வில் பொரு­ளா­தார மந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது என்­றும் இதன் கார­ண­மாக உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி எதிர்­ம­றை­யாக இருக்­கக்­கூ­டும் என்­றும் ரிசர்வ் வங்கி ஆளு­நர் சக்­தி­காந்த் தாஸ் அண்­மை­யில் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார்.

இதே­போல், இன்­ஃபோ­சிஸ் நிறு­வ­னர் நாரா­ய­ண­மூர்த்­தி­யும், சுதந்­தி­ரம் அடைந்த பிறகு நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி முதன் முறை­யாக மிகக் குறை­வாக இருக்­கக் கூடும் என குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதையடுத்து மத்திய அரசை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி ஹை மும்கின் ஹை’ என்ற முழக்கத்தை முன்னெடுத்தது பாஜக. இதற்கு ‘மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்,’ என்று அர்த்தம்.

ஆனால் இந்த முழக்கத்தை பிரதமர் மோடி உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் வெளிப்படுத்தி இருப்பதாக ராகுல் விமர்சித்துள்ளார்.

“மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்,” என தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், அதனூடே இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்தையும் இணைத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!