கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடாக பணம் வசூலிக்க கர்நாடக அரசு முடிவு

கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடாக பணம் வசூலிக்க கர்நாடக அரசு முடிவு

1 mins read
9b658fb3-e053-42b7-b8da-2e86ae39ad68
பெங்களூரின் வடபகுதியில் உள்ள காவல் பைரசந்திரா வட்டாரத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடம். படம்: இபிஏ -

பெங்­க­ளூரு: அண்­மை­யில் பெங்­க­ளூ­ரு­வில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் குறித்து நீதி விசா­ரணை நடத்த கர்­நா­டக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும், கல­வ­ரத்­தின்­போது பொதுச் சொத்­து­க­ளுக்கு சேதம் விளைவித்த வன்­மு­றை­யா­ளர்­க­ளி­டம் இருந்து சேத அள­வுக்கு ஏற்ப அப­ரா­தம் வசூ­லிக்­கப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புலி­கேசி நகர் தொகுதி எம்­எல்­ஏ­வாக இருப்­ப­வர் அகண்ட சீனி­வாச மூர்த்தி. இவ­ரது உற­வி­னர் ஒரு­வர் அண்­மை­யில் சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்ட கருத்து பெரும் சர்ச்­சை­யா­னது.

இதை­ய­டுத்து பொது­மக்­களில் ஒரு எம்­எல்ஏ வீட்டை முற்­று­கை­யிட்­ட­னர்.

அவ­ரது உற­வி­னரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில், போராட்­டத்­தின் போது திடீ­ரென வன்­முறை வெடிக்க, எம்­எல்ஏ வீட்­டின் மீது சிலர் கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­தி­னர். மேலும் சில வாக­னங்­க­ளுக்­கும் தீ வைத்­த­னர்.

இத­னால் கல­வ­ரச்­சூ­ழல் ஏற்­ப­டவே, காவல்­து­றை­யி­னர் விரைந்து வந்து தடி­யடி நடத்தி, கண்­ணீர்ப் புகை குண்­டு­களை வீசி கூட்­டத்­தைக் கலைக்க முற்­பட்­ட­னர்.

எனி­னும் வன்­மு­றை­யா­ளர்­கள் எல்லை மீறி­ய­தால், துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டது.

இதில் மூன்று பேர் உயி­ரி­ழந்­த­து­டன், ஐம்­பது போலி­சார் காய­ம­டைந்­த­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் கல­வ­ரம் குறித்து நீதி விசா­ரணை நடத்­தப்­படும் என்­றும் சேத­ம­டைந்த பொதுச்­சொத்­து­க­ளுக்­கான தொகை வசூ­லிக்­கப்­படும் என்­றும் கர்­நா­டக அரசு தெரி­வித்­துள்­ளது.

உச்ச நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வைப் பின்­பற்றி இவ்­வாறு தொகை வசூ­லிக்­கப்­ப­டு­வ­தாக அம்­மா­நில அமைச்­சர் பொம்பை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.