அயோத்தி ராமர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவருக்கு கிருமித்தொற்று

லக்னோ: அயோத்தி ராமர் கோவில் அறங்­கா­வ­லர் குழு­வின் தலை­வர் மகாந்த் நித்ய கோபால் தாசுக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யாகி உள்­ளது. இதை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். அறங்­கா­வ­லர் குழு­வின் தலை­வர் என்ற வகை­யில் ராமர் கோவி­லுக்­கான பணி­களை முழு வீச்­சில் கவ­னித்து வந்­தார் நித்ய கோபால் தாஸ்.

அண்­மை­யில் அயோத்தி ராம­ஜென்ம பூமி­யில் நடை­பெற்ற ராமர் கோவி­லுக்­கான அடிக்­கல் நாட்டு பூசை­யின்­போது பிர­த­மர் மோடி­யு­டன் அமர்ந்­தி­ருந்­தார்.

உத்­தர பிர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத், ஆர்.எஸ்.எஸ் தலை­வர் மோகன் பக­வத், உத்­தர பிர­தேச ஆளு­நர் ஆனந்­தி­பென்­ப­டேல் உள்­ளிட்­டோ­ரும் நித்ய கோபால் தாஸு­டன் ராமர் கோவில் அடிக்­கல் நாட்டு விழா­வில் பங்­கேற்­றி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon