சுடச் சுடச் செய்திகள்

சுற்­றுச்­சூ­ழல் விதி­களை நீர்த்து போகச் செய்­யும் மத்திய அரசின் நடவடிக்கை

சுற்றுச்சூழல் வரைவறிக்கை குறித்து ராகுல் காந்தி சாடல்

புது­டெல்லி: இயற்­கையை நாம் பாது­காத்­தால்­தான் இயற்கை நம்மை பாது­காக்­கும் என்று காங்­கி­ரஸ் எம்பி ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய அரசு சுற்­றுச்­சூ­ழல் விதி­களை நீர்த்து போகச் செய்­யும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக அவர் தமது டுவிட்­டர் பதி­வில் சாடி­யுள்­ளார்.

மத்­திய அரசு கொண்டு வந்­துள்ள சுற்­றுச்­சூ­ழல் தாக்க மதிப்­பீட்டு வரைவு அறிக்கை 2020ல் இடம்­பெற்­றுள்ள பல்­வேறு அம்­சங்­க­ளுக்கு சூழ­லி­யல் ஆர்­வ­லர்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

இது­கு­றித்து பரி­சீ­லிக்­கப்­படும் என மத்­திய சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் பிர­காஷ் ஜவ­டே­கர் உறுதி அளித்­துள்­ளார்.

“இது வெறும் வரை­வு­தான். இறுதி அறிக்கை அல்ல. மக்­கள் கருத்து தெரி­விக்­கவே இந்த வரைவு முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கிறது. அனை­வ­ரது கருத்­து­களும் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன,” என்று அமைச்­சர் பிர­காஷ் ஜவ­டே­கர் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் சுற்­றுச்­சூ­ழல் தாக்க மதிப்­பீட்டு வரைவு அறிக்கை 2020ஐ உட­ன­டி­யாக திரும்­பப் பெற வேண்­டும் என ராகுல் வலி­யு­றுத்தி உள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon