புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் சரியாக கையாளவில்லை என்று பிரசாந்த் பூஷண் விமர்சித்திருந்தார்.
மேலும் நீதிபதிகளின் செயல் பாட்டை சமூக வலைத்தளங்களில் அவர் விமர்சித்ததால் உச்ச நீதி மன்றம் தாமாக முன் வந்து நீதி மன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டாலும் தண்டனை விவரம் வெளியிடப்படவில்லை.
இது குறித்து வரும் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவிக்க வுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பாதிக்கப் பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
ஆனால் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை என்று பிரபல வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் பீமா கோரேகான் வன்முறை வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ள சமூக ஆா்வலா்கள் வராவர ராவ், சுதா பரத்வாஜ் ஆகி யோா் நடத்தப்பட்ட விவகாரம் குறித்து நீதித்துறையை விமா்சிக்கும் வகையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கட்டுரையில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக பிரசாந்த் பூஷண் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குத் தொடுத்தது.

