இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.00 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்தியக் கொடி ஏற்றப்பட்டது. கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக சுதந்திர தின நிகழ்ச்சிகள் இணையம் வழி நடைபெறும் என நேற்று தெரிவிக்கப்பட்டது.
கொடியேற்ற நிகழ்வுக்குப் பிறகு சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பி. குமரன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் இணையம் வழி கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பிறகு தூதரகம் ஏற்பாடு செய்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. இந்தியத் தூதரகத்தின் ஃபேஸ்புக் மூலம் இந்த இணைய வழி நிகழ்ச்சி நடந்தேறியது.

