முகக்கவசம் அணியத் தவறினால் ரூ.1 லட்சம் அபராதமா?: அதிருப்தி

முகக்கவசம் அணியத் தவறினால் ரூ.1 லட்சம் அபராதமா?: அதிருப்தி

1 mins read
489bf9ef-2de5-472f-b917-84fb3bc319ea
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பகலபூர் மருத்துவமனையில் கொவிட்-19 சிகிச்சை பெற்று வரும் நோயாளி. படம்: ராய்ட்டர்ஸ் -

புவ­னேஸ்­வர்: ஒடிசா மாநி­லத்­தில் கொரோனா பாதிப்பு 52 ஆயி­ரத்­தைக் கடந்­து­விட்­ட­தால் கடு­மை­யான விதி­களை அமல்­ப­டுத்த அரசு திட்­டமிட்­டுள்­ளது.

அந்த மாநி­லத்­தில் கிரு­மித்­தொற்­றால் 314 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். கஞ்­சம் மாவட்­டம் பெராம்­புர் நக­ராட்­சி­யில் வசிக்­கும் மக்­களில் மூன்­றில் ஒரு பங்­கி­ன­ருக்கு அறி­கு­றி­யில்லா பாதிப்பு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

கிரு­மிப் பர­வல் வேகத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முகக்­க­வ­சம் அணி­யா­மல், சமூக இடை­வெ­ளியை கடைப்­பி­டிக்­கத் தவ­று­வோ­ருக்கு கடு­மை­யான அப­ரா­தம் விதிக்க ஒடிசா அரசு முடிவு செய்­துள்­ளது.

இது குறித்து அம்­மா­நி­லத்­தின் தலை­மைச் செய­லர் ஆசித் திரி­பாதி கூறு­கை­யில், 1897ஆம் ஆண்டு இயற்­றப்­பட்ட தொற்­று­நோய் தடுப்­புச் சட்­டத்தை திருத்தி அவ­ச­ரச் சட்­டம் பிறப்­பிப்­பது குறித்து அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.

"இதன்­மூ­லம் கொரோனா பர­வல் தடுப்பு விதி­மு­றை­களை மீறு­வோ­ருக்கு குறிப்­பிட்ட காலம் சிறைத் தண்­டனை அல்­லது 1 லட்­சம் ரூபாய் வரை அப­ரா­தம் விதிக்க முடி­யும். சட்­ட­ச­பை­யைக் கூட்ட முடி­யா­த­தால் அவ­ச­ரச் சட்­டம் பிறப்­பிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது," என்­றார்.

இந்த அறி­விப்பு மக்­க­ளி­டையே அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஒடிசா உயர் நீதி­மன்ற மூத்த வழக்­க­றி­ஞர் சூரிய பிர­சாத் மிஸ்ரா "முகக்­க­வ­சம் அணி­யாத கார­ணத்­திற்­காக ஓர் ஏழை­யி­டம் எப்­படி 1 லட்­சம் ரூபாய் அப­ரா­தம் வசூலிக்க முடி­யும்?," என கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.