புரியும்படி எழுத மருத்துவர்களுக்கு நீதிபதி உத்தரவு

புரியும்படி எழுத மருத்துவர்களுக்கு நீதிபதி உத்தரவு

1 mins read
d6d91729-5a15-488d-8edd-ccbc300c12d5
படம்: ஊடகம் -

கட்டாக்: மருந்­து­க­ளுக்­கான பரிந்­துரை சீட்­டில் மருத்­து­வர்­கள் தெளி­வாக புரி­யும்­படி மருந்­தின் பெயர்­களை பெரிய எழுத்­து­களில் எழுத வேண்­டும் என்று ஒடிசா உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. வழக்கு ஒன்றை விசா­ரித்த உயர் நீதி­மன்ற நீதி­பதி பனி­கி­ரஹி, மருந்­துச் சீட்­டில் புரி­யா­த­படி மருத்­து­வர்­கள் கிறுக்­கு­வ­தால் நோயா­ளி­கள், மருந்­தா­ளு­நர்­கள், போலிஸ், நீதி­ப­தி­கள் என எல்லாத் தரப்­பி­ன­ரும் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார். மேலும், 2016ஆம் ஆண்­டில் மருத்­துவ மன்­றம் அறி­வு­றுத்­தி­ய­தற்கு இணங்க 'கேப்­பிட்­டல் லெட்­டர்' எனப்­படும் பெரிய எழுத்­து­களில் மருத்­து­வர்­கள் மருந்­தின் பெயரை எழுதவேண்­ டும் என்­றும் நீதி­பதி கூறினார்.