சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவிட்டு உரையாற்றினார். அப்போது, அவர் குறுகிய காலத்தில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, அவை அனைத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 'நீட் தேர்வை' நடத்தக்கூடாது என்று கொள்கை அளவில் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வினால், தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது.
அதை நிவர்த்தி செய்யும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் மருத்துவர் ஆகும் வகையில் அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க தமிழக அரசு முடிவு செய்து, அதையே வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

