மகாராஷ்டிரா: 19,749 பேர் பலி; மிரட்டும் கொரோனா தொற்று

மகாராஷ்டிரா: 19,749 பேர் பலி; மிரட்டும் கொரோனா தொற்று

2 mins read
d1b64205-574a-4586-b602-d2b0402f8343
மும்பை பல்லாடியம் கடைத்தொகுதியில் முகக்கவசம் அணிந்தவாறு செல்லும் வாடிக்கையாளர்கள். படம்: ஏஎப்பி -

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா கிரு­மித் தொற்­றின் கோரப்­பிடி மேலும் இறுகி வரு­கிறது. நேற்று முன்­தி­னம் ஒரே­ நா­ளில் அங்கு புதி­தாக 12,614 பேருக்கு கிரு­மித் தொற்று பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 5,84,754ஆக அதி­க­ரித்­துள்­ளது என அம்­மா­நில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. மேலும், உயிரி­ழந்­தோ­ரின் எண்­ணிக்கை 19,749ஆக உயர்ந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் சிகிச்­சைக்­குப் பின் கிரு­மித் தொற்­றில் இருந்து குண­ம­டைந்­த­வர்­கள் எண்­ணிக்கை 4 லட்­சத்­தைக் கடந்­துள்­ளது என்­றும் தற்­போது 1,56,409 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் சுகா­தா­ரத்­துறை­யின் அறிக்கை தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே கர்­நா­ட­கா­வில் புதி­தாக 8,818 பேருக்கு கிருமி தொற்­றி­யதை அடுத்து பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 2,19,926ஆக அதி­க­ரித்­துள்­ளது. அங்கு நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் மேலும் 114 பேர் பலி­யாகி உள்­ள­னர். இதை­ய­டுத்து மரண எண்­ணிக்கை 3,831ஆக உயர்ந்­துள்­ளது.

குண­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,34,811ஆக அதி­க­ரித்­துள்­ள­தைச் சுட்­டிக் காட்­டி­யுள்ள கர்­நா­டக சுகா­தா­ரத்­துறை, தற்­போது 81,276 பேர் மட்­டுமே மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் கிரு­மித் தொற்று குறித்து பொது­மக்­கள் அச்சமடையத் தேவை­யில்லை என்றும் தெரி­வித்­துள்­ளது.

தெலுங்­கா­னா­வில் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 91 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது. இது­வரை 693 பேர் பலி­யா­கி­யுள்­ள­னர். 68 ஆயி­ரம் பேர் கொவிட்-19 நோயி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர். ஆந்­தி­ரா­வில் மொத்­தம் 2,81,817 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இது­வரை 2,562 பேர் பலி­யா­கி­யுள்­ள­னர்.

2.58 மில்லியன் பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2.58 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1.86 மில்லியன் பேர் சிகிச்சைக்குப் பின்னர் கொரோனா கிருமியின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர். இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 71.91 விழுக்காடு ஆகும். இந்தியாவில் இதுவரை 29 மில்லியன் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 63 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது.