ஸ்வப்னாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஸ்வப்னாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

1 mins read
be0eb7fd-199a-40b8-8c95-d8e7824f553e
ஸ்வப்­னா­வு­டன் முதல்­வ­ரின் முன்­னாள் செய­லா­ளர் சிவ­சங்­க­ருக்கு உள்ள தொடர்பு குறித்த கூடு­தல் தக­வல்­களை அம­லாக்­கத்­துறை நீதி­மன்­றத்­தில்­ தெ­ரி­வித்­தது. கோப்புப்படம் -

கொச்சி: கேரள தங்க கடத்­தல் வழக்­கில் முக்­கிய குற்­ற­வா­ளி­யான ஸ்வப்னா உள்­ளிட்ட 3 பேரை 26ஆம் தேதி வரை நீதி­மன்­றக் காவ­லில் வைக்­கும்­படி கொச்சி நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஸ்வப்­னா­வு­டன் முதல்­வ­ரின் முன்­னாள் செய­லா­ளர் சிவ­சங்­க­ருக்கு உள்ள தொடர்பு குறித்த கூடு­தல் தக­வல்­களை அம­லாக்­கத்­துறை நீதி­மன்­றத்­தில்­ தெ­ரி­வித்­தது.

இரு­வ­ரும் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சுக்கு இரு­முறை பய­ணம் மேற்­கொண்­ட­தாக அம­லாக்­கத்­துறை தெரி­வித்­துள்­ளது.