பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.64 மில்லியன்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 2.64 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் கொவிட்-19 பாதிப்­பைக் கண்­ட­றிய இது­வரை சுமார் 30 மில்­லி­யன் மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக நாடு முழு­வ­தும் மத்­திய, மாநில அர­சு­கள் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்த போதி­லும் கொவிட்-19 பாதிப்­பி­லி­ருந்து குண­ம­டை­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் சீராக அதி­க­ரித்து வரு­கிறது. மேலும் இறப்­போர் விகி­த­மும் நன்கு குறைந்­துள்­ளது என சுகா­தார அமைச்சு சுட்­டிக் காட்­டி­யுள்­ளது.

நாடு முழு­வ­தும் கொவிட்-19 தொற்­றைக் கண்­ட­றிய சுமார் 30 மில்­லி­யன் மாதி­ரி­கள் பரி­சோதனைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. இது ஞாயிற்றுக்­கி­ழமை மாலை நில­வ­ர­மா­கும்.

கிரு­மித் தொற்­றைக் கண்­ட­றி­யும் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள நாட்­டில் 1,469 ஆய்­வ­கங்­கள் முழு­வீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­றன.

“தின­மும் பத்து லட்­சம் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வதை இலக்­கா­கக் கொண்டு செயல்­பட்டு வரு­கி­றோம். தற்­போது தின­மும் எழு லட்­சம் பரி­சோ­த­னை­கள் என்ற அளவு எட்­டப்­பட்­டுள்­ளது. அதிக எண்­ணிக்­கை­யி­லான பரி­சோ­த­னை­கள் கார­ண­மாக தொற்­றுப் பர­வல் வேகம் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் உயி­ரி­ழப்பு விகி­த­மும் குறைந்­துள்­ளது,” என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

தற்­போது நாட்­டில் 676,900 நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இது­வரை பலி­யா­னோர் எண்­ணிக்கை 50,921 ஆக உள்­ளது.

இறப்பு விகி­தம் உல­கி­லேயே மிகக் குறைந்த அள­வில் 1.93 விழுக்­கா­டாக உள்­ளது என்­றும் இது கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நில­வ­ரம் என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் பலி எண்­ணிக்கை 50 ஆயி­ரத்­தைக் கடக்க 23 நாட்­கள் ஆன நிலை­யில் பிரே­சி­லில் 95 நாட்­க­ளா­னது. மெக்­சி­கோ­வில் கிரு­மித்­தொற்று ஏற்­பட்ட நாளில் இருந்து 141 நாட்­க­ளுக்­குள் 50 ஆயி­ரம் பேர் உயி­ரி­ழந்­த­னர்.

ஆனால் இதே மரண எண்­ணிக்­கையை எட்­டிப்­பி­டிக்க இந்­தியாவிற்கு 156 நாட்­கள் ஆனது தெரிய வந்துள்ளது.

நாடு முழு­வ­தும் இது­வரை 1.9 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் கொவிட் 19 நோயி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர். இது நோயா­ளி­க­ளின் மொத்த எண்­ணிக்­கை­யில் 72.51 விழுக்­கா­டா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!