வட மாநிலங்களை புரட்டிப் போடும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட மாநிலங்களை புரட்டிப் போடும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

1 mins read
c2d7bdc3-8689-46c6-a6a6-87fa83adb6f7
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஆகஸ்ட் 17ஆம் தேதி பெய்த கன மழையின்போது சாலைகளில் தேங்கிய மழைநீர். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: வட மாநி­லங்­களில் மேலும் சில நாட்­கள் கன­மழை நீடிக்க வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

ராஜஸ்­தான், பீகார், அசாம், உத்­த­ரப்­பி­ர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­க­ளின் பல்­வேறு பகு­தி­கள் மழை, வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில் குஜ­ராத், மகா­ராஷ்­டிரா, கோவா உள்­ளிட்ட மேற்கு மாநி­லங்­க­ளுக்­கும் கன­மழை எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பீகா­ரில் மழை வெள்­ளத்­தால் சுமார் 80 லட்­சம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது­வரை 25 பேர் பலி­யாகி உள்­ள­னர். 16 மாவட்­டங்­கள் வெள்­ளத்­தால் பலத்த சேதங்­க­ளைச் சந்­தித்­துள்­ளன.

அசா­மில் உள்ள 3 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளின் இயல்பு வாழ்க்கை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

ராஜஸ்­தா­னில் வெள்­ளப்­பெ­ருக்­கில் சிக்கி 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். அங்கு மீண்­டும் கன­மழை பெய்­ய­லாம் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ள­தால் 20 மாவட்­டங்­களில் மாநி­லப் பேரி­டர் மீட்­புக் குழுக்­கள் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தி­லும் 15 மாவட்­டங்­கள் வெள்­ளப்­பெ­ருக்­கால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாநில நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

ஒடி­சா­வில் கடந்த 13ஆம் தேதி­யி­லி­ருந்து கன­மழை நீடித்­துள்­ள­தால் பல்­வேறு மாவட்­டங்­கள் வெள்ள அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ளன.

தென்­மா­நி­லங்­க­ளைப் பொறுத்­த­வரை ஆந்­தி­ரா­வில் கோதா­வரி ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யம் நில­வு­கிறது. வட­கர்­நா­ட­கா­வில் பல மாவட்­டங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த இரு தினங்களாக நீடித்து வரும் கனமழையால் கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.