இணைய வகுப்புகளில் பங்கேற்க இயலாத 94 விழுக்காடு மாணவர்கள்

இணைய வகுப்புகளில் பங்கேற்க இயலாத 94 விழுக்காடு மாணவர்கள்

1 mins read
b3a6c64d-8c5c-4735-8039-21c9fdd72878
கொரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் கா‌ஷ்மீர் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன் வெட்டவெளியில் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார். படம்: ஏஎப்பி, முஸ்தபா -

சென்னை: இணை­யம் வழி நடத்­தப்­படும் வகுப்­பு­களில் பங்­கேற்க இய­லா­மல் தென்­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த 94 விழுக்­காடு மாண­வர்­கள் தவித்து வரு­வ­தாக அண்­மைய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

ஊர­டங்கு கார­ண­மாக பள்ளி, கல்­லூ­ரி­கள் உள்­ளிட்ட அனைத்­துக் கல்வி மையங்­களும் மூடப்­பட்­டுள்­ளன. இணை­யம் வழி வகுப்­பு­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், குழந்­தை­கள் உரிமை அமைப்­பான 'க்ரை' ஆய்வு ஒன்றை மேற்­கொண்­டுள்­ளது. 11 முதல் 18 வய­துக்­குட்­பட்ட சுமார் 6 ஆயி­ரம் மாண­வர்­க­ளி­டம் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இதில் தமி­ழ­கம், கர்­நா­டகா, ஆந்­திரா, தெலுங்­கானா ஆகிய நான்கு தென்­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த 94 விழுக்­காடு மாண­வர்­க­ளி­டம் திறன்­பே­சி­கள் இல்லை என்­ப­தும், ஆறு விழுக்­காடு மாண­வர்­கள் மட்­டுமே தற்­போது இணை­யம் வழி­யி­லான வகுப்­பு­களில் முழு­மை­யா­கப் பங்­கேற்­கி­றார்­கள் என்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

29 விழுக்­காடு மாண­வர்­கள் தங்­கள் வீட்­டில் உள்­ள­வர்­க­ளின் கைபே­சி­க­ளை தான் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

அந்த மாண­வர்­களில் 55 விழுக்­காட்­டி­னர் வாரத்­துக்கு 3 நாட்­கள் மட்­டுமே கைபேசி பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

ஒட்­டு­மொத்­தத்­தில் 77 விழுக்­காடு மாண­வர்­கள் நாளொன்­றுக்கு 2 மணி நேரத்­துக்­கும் குறை­வா­கத்­தான் திறன்­பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்து­வ­தாக ஆய்வு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன. இது மிகுந்த கவலை அளிப்­ப­தாக ஆய்வை நடத்­திய அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இணையம் வழி பள்ளி வகுப்புகளை நடத்துவதற்குப் பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.