பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்-19; உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்-19; உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

1 mins read
521abe0d-cf7b-4105-b12b-00ef074d8c7e
அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட மருத்துவமனை, அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டது. படம்: ஊடகம் -

இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவரது உடல் நலம் மோசமடைந்துள்ளதாக டெல்லி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, திரு பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் தென்படுகிறதென அவரது மகன் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூளையில் இருந்த ரத்தக்கட்டியை அகற்ற கடந்த வாரம் திரு பிரணாப்புக்கு டெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட மருத்துவமனை, அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்