நோயிலிருந்து மீண்டார் 103 வயது முதியவர்

நோயிலிருந்து மீண்டார் 103 வயது முதியவர்

1 mins read
7aed051e-ff42-4f06-968e-96bd5beb6db0
கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்த 103 வயது மூதாட்டியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் மருத்துவமனைப் பணியாளர்கள். படம்: ஊடகம் -

திருவனந்தபுரம்: கேரளாவில் முதியவர்கள் பலர் கொரோனா பிடியில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வருகின்றனர். ஆலுவா பகுதியைச் சேர்ந்த பரீத் என்பவரும் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளார்.

103 வயதான இவருக்கு ஜூலை 28ஆம் தேதி கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. இதனால் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் 20 நாட்களில் முழுமையாகக் குணமடைந்த பரீத் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார்.