'காந்தி குடும்பத்தில் இருந்து புதிய தலைவர் வேண்டாம்'

'காந்தி குடும்பத்தில் இருந்து புதிய தலைவர் வேண்டாம்'

1 mins read
1fe05110-4519-49b1-8d41-70720ed1be3e
கோப்புப்படங்கள்: ஊடகம் -

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சிக்கு காந்தி குடும்­பத்­தைச் சாராத ஒரு­வர் தலை­வ­ராக வேண்­டும் என்று ராகுல் காந்தி எம்பி தெரி­வித்­துள்ள கருத்தை தானும் வர­வேற்­ப­தாக பிரி­யங்கா காந்தி தெரி­வித்­துள்­ளார்.

அத்­த­கைய தலை­வ­ரின் வழி­காட்­டு­த­லில் செயல்­பட தாம் ஆர்­வத்­து­டன் இருப்­ப­தாக அவர் கூறி­யுள்­ளார்.

'இந்­தி­யா­வின் அடுத்த தலை­முறை தலை­வர்­கள்' என்ற புத்­த­கத்­தில் பல்­வேறு விஷ­யங்­கள் தொடர்­பாக பிரி­யங்கா காந்தி தெரி­வித்த கருத்­து­கள் இடம்­பெற்­றுள்­ளன.

சுதந்­தி­ரப் போராட்ட வீரர்­கள் போராடி பெற்ற சுதந்­தி­ர­மும் கட்­ட­மைத்த தேச நல­னும் அழிக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள பிரி­யங்கா, இத்­த­கைய நிலை­யைக் கண்டு தம்­மால் சும்மா இருக்க முடி­ய­வில்லை எனத் தெரி­வித்­துள்­ளார்.

தாம் அர­சி­ய­லில் ஈடு­பட இதுவே கார­ணம் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"காந்தி குடும்­பத்­தி­லி­ருந்து யாரும் காங்­கி­ரஸ் தலை­வ­ரா­கக்­கூ­டாது என்று ராகுல் தெரி­வித்த கருத்தை நான் முழு­மை­யாக ஆத­ரிக்­கி­றேன். காங்­கி­ரஸ் கட்சி இனி தனித்­து­வ­மான பாதை­யைத் தேர்ந்­தெடுக்க வேண்­டும்.

"அதற்கு காந்தி குடும்­பத்­தைச் சாராத ஒரு­வர் கட்­சித் தலை­வ­ராக வேண்­டும்," என பிரி­யங்கா காந்தி தெரி­வித்­துள்­ளார்.