சுஷாந்த் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு

1 mins read
96b0b9dd-fa5f-4947-bf0d-792cb9ae2471
படம்: ஏஎப்பி -

மும்பை: பிர­பல இந்தி நடி­கர் சுஷாந்த் சிங் ராஜ்­புத் மரண வழக்கை சிபிஐ விசா­ரிக்க உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

34 வய­தான சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்­பை­யில் உள்ள தங்­கும் விடு­தி­யில் இருந்­த­போது தனது உயிரை மாய்த்­துக் கொண்­டார். இந்­நி­லை­யில் அவர் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம் எனும் சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

சுஷாந்த் சிங் பீகா­ரைச் சேர்ந்­த­வர் என்­ப­தால் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்­ப­டைக்க அம்­மா­நில அரசு உத்­த­ரவு பிறப்­பித்­தது. எனி­னும் மகா­ராஷ்­டிரா அரசு இதை ஏற்­க­வில்லை.

இந்­நி­லை­யில் திடீர் திருப்­ப­மாக சுஷாந்த் சிங்­கின் காத­லி­யான நடிகை ரியா மீது சுஷாந்த் தந்தை பீகார் போலி­சில் புகார் அளித்­தார். இதை­ய­டுத்து ரியா மற்­றும் அவ­ரது குடும்­பத்­தி­னர் மீது சிபிஐ வழக்­குப் பதிவு செய்­தது. மத்­திய அம­லாக்­கப் பிரி­வும் ரியா­வி­டம் விசா­ரணை நடத்­தி­யது.

இந்த வழக்கை மும்­பைக்கு மாற்­றக்­கோரி நடிகை ரியா தாக்­கல் செய்த மனு மீதான விசா­ரணை உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நடந்­தது. அதன் முடி­வில் சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசா­ரிப்­ப­தில் தடை­யில்லை என்­­று உச்­ச­ நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.