அதானி குழு­மத்­தி­டம் ஒப்படைக்கப்படும் விமான நிலையங்கள்

அதானி குழு­மத்­தி­டம் ஒப்படைக்கப்படும் விமான நிலையங்கள்

2 mins read
73175712-df6b-4833-b0fd-3b3b806ed008
திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்தை தனி­யார் வசம் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் ஒப்­ப­டைப்­ப­தற்கு கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளார். திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்தை அதானி குழு­மத்­தி­டம் ஒப்­ப­டைக்­கும் விவ­கா­ரத்­தில் கேரள அரசு ஒத்­து­ழைப்­பது மிகக் கடி­னம் என பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் அவர் தெரி­வித்­துள்­ளார். கோப்புப்படம் -

புது­டெல்லி: மூன்று விமான நிலை­யங்­க­ளைத் தனி­யாரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்க மத்­திய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் வழங்கி உள்­ளது.

மேலும் அடுத்த பத்து ஆண்­டு­களில் நாடு முழு­வ­தும் நூறு புதிய விமான நிலை­யங்­கள் கட்­டப்­படும் என்­றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

நாட்­டில் ஏற்­கெ­னவே ஆறு விமான நிலை­யங்­கள் தனி­யார் வசம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து மேலும் ஆறு விமான நிலை­யங்­க­ளைத் தனி­யா­ருக்கு குத்தகை அடிப்படையில் அளிக்க மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

அந்த முடி­வின்­படி தற்­போது ஜெய்ப்­பூர், கவு­காத்தி, திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யங்­கள் அதானி குழு­மத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வ­தாக மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் ஹர்­தீப்­சிங் பூரி தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், விமான நிலை­யங்­களை ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் நிர்­வ­கிக்க அதானி குழு­மம் அதிக ஆர்­வம் காட்­டு­வ­தாக தெரி­வித்­தார்.

ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் மத்­திய அர­சும் அதானி குழு­மம் சார்­பான நிர்­வாக அமைப்­பும் இணைந்து விமான நிலை­யங்­களை நிர்­வ­கிக்­கும் என்று குறிப்­பிட்ட அமைச்­சர் ஹர்­தீப் சிங், இத்­த­கைய நட­வ­டிக்­கை­யின் மூலம் இந்­திய விமான நிலை­யங்­கள் உல­கத் தரத்­துக்கு உய­ரும் என்­றார்.

இதற்­கி­டையே திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்தை தனி­யார் வசம் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் ஒப்­ப­டைப்­ப­தற்கு கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளார்.

இது­தொ­டர்­பாக அவர் பிர­த­மர் மோடிக்கு கடி­தம் எழுதி உள்­ளார்.

அதில், திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்தை அதானி குழு­மத்­தி­டம் ஒப்­ப­டைக்­கும் விவ­கா­ரத்­தில் கேரள அரசு ஒத்­து­ழைப்­பது மிகக் கடி­னம் என அவர் தெரி­வித்­துள்­ளார்.

மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.