விமான நிலைய பராமரிப்பு குத்தகை: மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள அரசு வழக்கு

1 mins read
8269d4d4-e155-462c-be3f-6a83257dcb97
திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்தை தனி­யார் வசம் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் ஒப்­ப­டைப்­ப­தற்கு கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளார். திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்தை அதானி குழு­மத்­தி­டம் ஒப்­ப­டைக்­கும் விவ­கா­ரத்­தில் கேரள அரசு ஒத்­து­ழைப்­பது மிகக் கடி­னம் என பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் அவர் தெரி­வித்­துள்­ளார். கோப்புப்படம் -

திருவனந்தபுரம்: அதானி குழு­மத்­துக்கு திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலைய பரா­ம­ரிப்பு குத்­தகை வழங்­கப்­ப­டு­வதை எதிர்த்து கேரள அரசு உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­துள்­ளது.

அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தின் அடிப்­ப­டை­யில் கேரள அரசு இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது.

திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்தை பரா­ம­ரிப்­ப­தற்­கான ஐம்­ப­தாண்­டுக்­கு­ரிய குத்­த­கையை அதானி குழு­மம் பெற்­றுள்­ளது.

அண்­மை­யில் பிர­த­மர் மோடி தலை­மை­யில் நடை­பெற்ற மத்­திய அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தின்­போது ஜெய்ப்­பூர், திரு­வ­னந்­த­பு­ரம், கவு­காத்தி விமான நிலை­யங்­க­ளின் பரா­ம­ரிப்­புக் குத்­த­கையை பொதுத்­துறை, தனி­யார் கூட்­டு­மு­யற்சி அடிப்­ப­டை­யில் அதானி குழு­மத்­துக்கு அளிக்க ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டது. ஆனால், இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் அம்­மா­நில முதல்­வர் பின­ராயி விஜ­யன் தலை­மை­யில் கேரள அனைத்­துக் கட்­சிக் கூட்­டம் நடை­பெற்­றது. இதில் பாஜக மட்­டும் கலந்­து­கொள்­ள­வில்லை.

கேரள அரசு இந்த விவ­கா­ரம் தொடர்­பாக மேற்­கொள்­ளும் சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனைத்­துக் கட்­சி­களும் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்­றும் கேரள சட்­டப்­பே­ர­வை­யைக் கூட்டி மத்­திய அர­சின் முடி­வுக்கு எதி­ராக தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டும் என்­றும் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து இந்­நி­லை­யில் மத்­திய அர­சின் முடிவை எதிர்த்து கேரள அரசு சார்­பில் உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய அர­சின் முடி­வுக்­குத் தடை விதிக்­கு­மாறு கேரள அர­சின் மனு­வில் கோரப்­பட்­டுள்­ளது.