கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் வீட்டிலிருந்து மூன்று கிலோ தங்கம்

கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் வீட்டிலிருந்து மூன்று கிலோ தங்கம்

1 mins read
f1a88cf4-3907-4422-991f-6f4110df0991
ஆந்திர கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் குஜ்ஜல சீனிவாசலு. கோப்புப்படம்: ஊடகம் -

அமராவதி: கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் வீட்டிலிருந்து ஒரு கோடி ரொக்கப் பணம், ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

குஜ்ஜல சீனிவாசுலு, ஆந்திர கூட்டுறவு சங்கத்தின் தலைவராகப் பொறுப்பில் இருந்தார். அப்போது ஆந்திர கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிஐடி பிரிவு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீனிவாசலு வீட்டில் நேற்று முன்தினம் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி, ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்களைப் போலிசார் பறிமுதல் செய்தனர்.

இத்தனை சொத்துகளையும் நகைகளையும் வாங்கிக் குவித்தது தொடர்பாக சீனிவாசுலுவிடம் போலிசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.