சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு விளையாட்டு வீரர்களுக்கான மிக உயரிய விருதான கேல் ரத்னா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 25 வயதான மாரியப்பன் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். மாற்றுத் திறனாளியான இவர், கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். இந்தச் சாதனையைப் புரிந்த முதல் இந்தியர் என்ற அடிப்படையில் அவருக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. கடந்தாண்டு நடைபெற்ற உலகத் தடகளப் போட்டியிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன். இந்நிலையில் மத்திய அரசு இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.
தமிழக வீரர் மாரியப்பனுக்கு உயரிய விருது
1 mins read
பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு விளையாட்டு வீரர்களுக்கான மிக உயரிய விருதான கேல் ரத்னா வழங்கப்பட்டுள்ளது. கோப்புப்படம் -

