143 பேர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண்

143 பேர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண்

2 mins read
da1ba80f-effb-4e6b-9b22-55791e67ab24
-

ஹைத­ரா­பாத்: கடந்த பத்து ஆண்­டு­களில் தம்மை 143 பேர் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கி­ய­தாக தெலுங்­கா­னா­வைச் சேர்ந்த ஒரு பெண் புகார் அளித்­துள்­ளார்.

இது மிகுந்த அதிர்ச்சி அளிப்­ப­தா­க­வும் இந்­தப் புகார் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் ஹைத­ரா­பாத் போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

ஷீலா என்ற அந்­தப் பெண்­ணுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திரு­ம­ண­மா­னது. அதன்­ பின்­னர் தனது குடும்­பத்­தைச் சேர்ந்த 20 பேர் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தம்மை பலாத்­கா­ரம் செய்­த­தா­க­வும் திரு­ம­ண­மான ஓராண்­டி­லேயே தமக்கு விவா­க­ரத்து ஆகி­விட்­டது என்­றும் அந்­தப் பெண் தெரி­வித்­துள்­ளார்.

விவா­க­ரத்­துக்­குப் பிறகு தாய்­வீடு திரும்­பிய அவர், தனது மேற்­ப­டிப்­பைத் தொடங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் அர­சி­யல் பிர­மு­கர்­கள், குடும்ப உறுப்­பி­னர்­கள், தொழில் அதி­பர்­கள் ஆகி­யோ­ரு­டன் சில மாண­வர்­களும் தம்­மைப் பாலி­யல் பலாத்­கா­ரத்­துக்கு உட் ­ப­டுத்­தி­ய­தாக போலி­சில் அளித்த புகா­ரில் அந்­தப் பெண் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், பலாத்­கா­ரம் செய்­யப்­ப­டும்­போது சிக­ரெட்­டால் சூடு வைப்­பது உள்­ளிட்ட சித்தி­ர­வ­தை­களுக்­கும் தாம் ஆளா­ன­தாக அவர் விவ­ரித்­தள்­ளார்.

அந்­தப் பெண் பல­ரால் மிரட்­டப்­பட்­ட­தா­க­வும் அதன் கார­ண­மா­கவே இது­வரை புகார் அளிக்­க­வில்லை என்­றும் போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து தலித் வன்­கொ­டுமைச் சட்­டம், பலாத்­கா­ரம் உள்­ளிட்ட பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்து போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

அந்­தப் பெண் ஏன் இவ்­வ­ளவு தாம­த­மா­கப் புகார் செய்­துள்­ளார் எனும் கேள்வி எழுந்­துள்­ளது.

வேறு ஏதே­னும் கார­ணத்­துக்­காக அவர் சில விஷ­யங்­களை மிகைப்­ப­டுத்­து­கி­றாரா என்ற சந்­தே­கத்­தை­யும் சிலர் எழுப்பி உள்­ள­னர்.

எனி­னும் இது­போன்ற கேள்­வி­க­ளுக்கு விசா­ர­ணை­யின் முடி­வில்­தான் பதில் கிடைக்­கும் என ஹைத­ரா­பாத் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.