இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல தூதரகப் பதிவு தேவையில்லை

புது­டெல்லி: வெளி­நா­டு­களில் உள்ள இந்­தி­யர்­கள் ‘ஏர் பப்­பல்ஸ்’ ஏற்­பாட்­டின் மூலம் தாய­கம் திரும்ப இந்­தி­யத் தூத­ர­கங்­களில் பதிவு செய்­ய­ வேண்­டிய அவ­சி­ய­மில்லை என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்திய விமானப் போக்­கு­வரத்து அமைச்­சர் ஹர்­தீப் சிங் பூரி இத­னைத் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்று விவ­கா­ரத்­தால் அனைத்­து­லக அள­வில் விமா­னப் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­நா­டு­களில் சிக்­கித் தவிக்­கும் இந்­தி­யர்­க­ளைத் தாய­கம் அழைத்­து­வர ‘வந்தே பாரத்’ திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கிறது மத்­திய அரசு. இது­வரை ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் இத்­திட்­டத்­தின்­கீழ் இந்­தியா திரும்பி உள்­ள­னர்.

எனி­னும் ‘வந்தே பாரத்’ திட்­டத்­தின் கீழ் பய­ணம் மேற்­கொள்ள விரும்­பு­வோர் தாங்­கள் தற்­போ­துள்ள நாடு­களில் இயங்­கும் இந்­தி­யத் தூத­ர­கங்­களில் தங்­கள் பெயர் உள்­ளிட்ட பல்­வேறு விவ­ரங்­க­ளைத் தெரி­விப்­பது கட்­டா­ய­மாக உள்­ளது.

இந்­நி­லை­யில் ‘ஏர் பப்­பல்ஸ்’ ஏற்­பாட்­டின் கீழ் தாய­கம் திரும்­பும் இந்­தி­யர்­கள், தூத­ர­கங்­களில் தங்­கள் பெய­ரைப் பதிவு செய்­ய­வேண்­டிய அவ­சி­யம் இல்லை என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சில கட்­டுப்­பா­டு­க­ளு­டன் விமா­னப் பய­ணத்­தைத் தொடங்­கு­வ­தற்­கான இரு­த­ரப்பு ஒப்­பந்­தமே ‘ஏர் பப்­பல்ஸ்’ என குறிப்­பி­டப்­ப­டு­கிறது.

‘ஏர் பப்­பல்ஸ்’ ஏற்­பாட்­டின்­கீழ் சிங்­கப்­பூர் உள்­ளிட்ட 13 நாடு­க­ளு­டன் விமா­னப் போக்­கு­வ­ரத்­தைத் தொடங்­கு­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கிறது இந்­தியா. ஏற்­கெ­னவே அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, ஜெர்­மனி, பிரான்ஸ் உள்­ளிட்ட ஆறு நாடு­க­ளு­டன் இந்­தியா இந்த ஒப்­பந்­தத்­தைச் செய்­துள்­ளது.

இந்­நி­லை­யில் ‘ஏர் பப்­பல்ஸ்’ ஏற்­பாட்­டில் நாடு திரும்­பும் இந்­தி­யர்­கள் தூத­ர­கங்­களை அணுக வேண்­டி­ய­தில்லை எனும் அறி­விப்பு தங்­க­ளது சிர­மங்­க­ளைக் குறைக்­கும் என வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த அறி­விப்பு தங்­க­ளுக்­கும் நிம்­ம­தி­ய­ளித்­தி­ருப்­ப­தாக வெளி­நாட்டு விமான நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஒரு மூத்த அதி­காரி தெரி­வித்­துள்­ளார்.

“விமா­னப் பய­ணி­கள் தங்­கள் பெயர் உள்­ளிட்ட விவ­ரங்­க­ளைப் பதிவு செய்­துள்­ள­னரா என்­பதை நாங்­கள் உறுதி செய்­ய­வேண்டி இருந்­தது. இப்­போது அதற்­கான அவ­சி­யம் இல்லை,” என்று அந்த அதி­காரி கூறி­ய­தாக இந்­திய ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

எனி­னும் ‘வந்தே பாரத்’ திட்­டத்­தின் கீழ் நாடு திரும்­பு­ப­வர்­கள் இந்­தி­யத் தூத­ர­கங்­களில் பெய­ரைப் பதிவு செய்­வது அவ­சி­யம் என்­றும் அதில் மாற்­ற­மில்லை என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!