கட்சியைப் புதுப்பிக்கக் கோரி சோனியாவுக்கு 23 தலைவர்கள் கடிதம்

2 mins read
53b208ef-672f-479b-98c6-228742f03311
சோனியா காந்தி. படம்: ஊடகம் -

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சியை அடி­யோடு புதுப்­பிக்க வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ள­தாக அக்­கட்சி­யின் மூத்த தலை­வர்­கள் 23 பேர் தெரி­வித்­துள்­ள­னர்.

இது ­தொ­டர்­பாக அவர்­கள் சார்­பில் காங்­கி­ரஸ் இடைக்­கா­லத் தலை­வர் சோனியா காந்­திக்­கு கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­தல் தோல்­விக்­குப் பிறகு காங்­கி­ரஸ் தலை­வர் பத­வி­யில் இருந்து விலகி­னார் ராகுல் காந்தி. தலை­வர் பத­வி­யில் நீடிக்­கு­மாறு கட்­சி­யின் முக்­கி­யப் பிர­மு­கர்­கள் பல­முறை வேண்­டு­கோள் விடுத்­தும் அவர் அதை ஏற்­க­வில்லை.

இதை­ய­டுத்து சோனியா காந்தி இடைக்­கா­லத் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றார்.

இந்­நி­லை­யில் காங்­கி­ரஸ் கட்சி இளை­யர்­க­ளின் நம்­பிக்­கையை மீண்­டும் பெற­வேண்டி உள்­ளது என்­றும் இளைய தலை­மு­றை­யின் வாக்கு வங்­கியை கட்சி இழந்து வரு­வ­தா­க­வும் மூத்த தலை­வர்­கள் 23 பேர் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

எனவே, அர­சி­யல் களத்­தில் முழு­ வீச்­சில் செயல்­ப­டக்­கூ­டிய தலை­வர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிப்­ப­தன் மூலம் கட்­சியை சீர­மைக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி சோனி­யா­வுக்கு கடி­தம் அனு­ப்பப்­பட்­டுள்­ளது.

அதில், ஐந்து மாநில முன்­னாள் முதல்­வர்­கள், முன்­னாள் மத்­திய அமைச்­சர்­கள், நடப்பு எம்­பிக்­கள் உள்ளிட்ட 23 பேர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.

நாட்­டில் மதம் சார்ந்த அரசி­ய­லால் ஏற்­பட்­டுள்ள அச்­சம், பாது­காப்­பின்மை, பொரு­ளா­தா­ரப் பின்­ன­டைவு, வேலை வாய்ப்­பின்மை தொடர்­பாக காங்­கி­ர­சின் நிலைப்­பாட்டை மக்­க­ளி­டம் கொண்டு செல்­ல­வேண்­டும் என வலி­யுறுத்தி உள்ள மூத்த தலை­வர்­கள், கட்சி­யைப் பலப்­ப­டுத்த அனைத்து அமைப்­பு­க­ளுக்­கும் தேர்­தல் நடத்­த­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இக்கடி­தத்­தில் மாநி­லங்­க­ளவை, எதிர்க்­கட்­சித் தலை­வர் குலாம் நபி ஆசாத், முன்­னாள் மத்­திய அமைச்­சர்­கள் கபில் சிபல், ஆனந்த் சர்மா, முன்­னாள் முதல்­வர்­கள் பூபேந்­திர சிங், வீரப்ப மொய்லி உள்­ளிட்­டோர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர். இதற்­கி­டையே இன்று சோனியா காந்தி தலை­மை­யில் டெல்­லி­யில் முக்­கிய ஆலோ­சனை நடை­பெ­று­கிறது.