'கொவிட்-19' நோயாளிகளை விட குணமடைந்தோர் அதிகம்

'கொவிட்-19' நோயாளிகளை விட குணமடைந்தோர் அதிகம்

2 mins read
51ba4fe3-8c07-434b-a22e-51bcef965ffa
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் குஜராத்தில் நேற்று மேற்படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் முகக்கவசத்துடன் தேர்வு எழுதினர். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்தொற்­றுக்­காக தற்­போது சிகிச்சை பெற்று வரு­ப­வர்­களை விட கொவிட்-19 நோயி­லி­ருந்து மீண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை மூன்று மடங்கு அதி­கம் உள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே நேற்று முன்­தி­னம் புதி­தாக மேலும் 61,408 பேருக்கு கிரு­மித் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 3.1 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது. இது­வரை 57,542 பேர் பலி­யாகி உள்­ள­னர்.

"இதே­வே­ளை­யில் நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் சுமார் 57 ஆயி­ரம் பேர் நோய்த்தொற்­றி­ல் இ­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர். இதன்­மூலம் குண­ம­டைந்­தோ­ரின் மொத்த எண்­ணிக்கை 2.33 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ளது. தற்­போது மருத்­து­வ­ம­னை­களில் சுமார் ஏழு லட்­சம் பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்," என்று மத்­திய அர­சின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மும்­பை­யில் தற்­போது 171,859 நோயா­ளி­கள் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். குண­ம­டைந்­தோ­ரின் மொத்த எண்­ணிக்கை 488,271ஆக அதி­க­ரித்­துள்­ளது. இது­வரை சுமார் 22 ஆயி­ரம் பேர் பலி­யாகி உள்­ள­னர்.

கர்நாடகாவில் சுமார் 83 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 189,564 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,683ஆக உள்ளது. ஆந்திராவில் சுமார் 89 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 260,087ஆக உள்ளது. அங்கு மூன்று ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொவிட்-19 நோய்க்கு பலியாகி உள்ளனர்.

உலகளவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 22 ஆயிரம் பேரும் தமிழகத்தில் சுமார் 6,400 பேரும் மூன்றாமிடத்தில் உள்ள கர்நாடகாவில் 4,616 பேரும் பலியாகி உள்ளனர்.