கர்நாடகாவில் அமைதியாக கழிந்தது பிள்ளையார் சதுர்த்தி

கர்நாடகாவில் அமைதியாக கழிந்தது பிள்ளையார் சதுர்த்தி

1 mins read
b2922d6c-6e62-4e94-ac9e-d686f36d652f
படம்: ஏஎப்பி, மஞ்சுளா கிரண் -

பெங்களூரு: கொரோனா கிரு­மித் தொற்று விவ­கா­ரம், வடகர்­நா­ட­கா­வில் ஏற்­பட்­டுள்ள மழை வெள்­ளப் பாதிப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் கர்­நா­டக மாநில மக்­கள் பிள்­ளை­யார் சதுர்த்தி­யைக் கொண்­டாடி உள்­ள­னர்.

எனி­னும் இந்­தாண்டு மக்­கள் மத்­தி­யில் வழக்­க­மான உற்­சா­கம் காணப்­ப­ட­வில்லை. மிக எளி­மை­யான முறை­யில் இப்­பண்­டிகை கொண்­டா­டப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இம்­முறை பிள்­ளை­யார் சதுர்த்­தியை முன்­னிட்டு கர்­நா­டக அரசு பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளது. பொது இடங்­களில் அதி­க­பட்­ச­மாக நான்கு அடி உயர சிலை­களை மட்­டுமே வைக்க முடி­யும் என்­றும் பெங்­க­ளூரு நக­ரில் ஒரு வார்­டுக்கு ஒரு சிலை மட்­டுமே வைக்க முடி­யும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டது.

பிள்­ளை­யார் சிலை­க­ளைக் கரைப்­ப­தற்கு என பெங்­க­ளூரு மாந­க­ராட்சி சார்­பில் தண்­ணீர்த் தொட்­டி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

வடகர்­நா­ட­கா­வில் 11 மாவட்­டங்­கள் மழை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இத்­த­கைய சூழ்­நிலை கார­ண­மாக இம்­முறை பிள்­ளை­யார் சதுர்த்தி அன்று கோவில்­களில் பக்­தர்­கள் கூட்­டம் குறை­வா­கவே இருந்­தது.

வழக்­க­மாக ஆயி­ரம் பக்­தர்­கள் கூடும் கோவில்­களில் அதில் சரி­பா­திக்­கும் குறை­வான பக்­தர்­களே காணப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் மேலும் தெரி­விக்­கின்­றன.

பிள்­ளை­யார் சிலை­கள், பூ, பழங்­கள் ஆகி­ய­வற்றை வாங்­கு­வ­தில் மக்­கள் ஆர்­வம் காட்­ட­வில்லை என்­றும் இதன் கார­ண­மாக 400 கோடி ரூபாய் அள­வுக்கு இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் வியா­பா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.