காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வுசெய்ய சோனியா வலியுறுத்து

காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வுசெய்ய சோனியா வலியுறுத்து

1 mins read
d58e1756-d591-4b10-9ca0-c8f684d4f06b
காங்கிரஸ் கட்சியின் இடைக்­கா­லத் தலை­வ­ராகப் பதவி வகிக்கும் சோனியா காந்தி, இனி கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்க காங்கிரசில் உள்ள தலைவர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருந்து தம்மை மாற்­று­வ­தற்­கான பணி­களை தொடங்க வேண்­டும் என கட்­சி­யின் மூத்த தலை­வர்­களை சோனியா காந்தி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

கட்­சித் தலை­மையை மாற்­றி­ய­மைக்க கோரி 23 மூத்த தலை­வர்­கள் எழு­திய கடி­தத்­தில், தலை­வர் பதவி குறித்து கூட்டு முடி­வெ­டுக்க வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். இதை­ய­டுத்து கட்­சிக்­குப் புதிய தலை­வரை தேர்வு செய்­யு­மாறு சோனியா வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சிக்கு காந்தி குடும்­பத்­தைச் சாராத ஒரு­வர் தலை­வ­ராக வேண்­டும் என பிரி­யங்கா காந்­தி­யும் ராகுல் காந்­தி­யும் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். தற்­போது சோனி­யா­வும் தலை­வர் பத­வி­யில் நீடிக்க மறுத்­துள்­ளார்.

மக்­க­ள­வைத் தேர்­தல் தோல்­வியை அடுத்து காங்­கி­ரஸ் எம்பி ராகுல் காந்தி கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருந்து வில­கி­னார். அதன் பின்­னர் இடைக்­கா­லத் தலை­வ­ராக சோனியா காந்தி பொறுப்­பேற்­றார்.

எனி­னும் தம்­மால் ஓராண்டு மட்­டுமே இப்­ப­த­வி­யில் நீடிக்­க­மு­டி­யும் என்­றும் அதற்­குள் புதிய தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டார்.

இந்­நி­லை­யில் தாம் குறிப்­பிட்ட ஓராண்டு காலம் நிறை­வ­டைந்­ததை அடுத்து பத­வி­யில் இருந்து வில­கு­வ­தாக அவர் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார். இதற்­கி­டையே காங்­கி­ரஸ் கட்­சியை ஒட்­டு­மொத்­த­மாக புதுப்­பிக்க வலி­யு­றுத்தி 23 மூத்த தலை­வர்­கள் சோனி­யா­வுக்கு கடி­தம் எழுதி உள்­ள­னர். இதற்கு சோனி­யா­வின் ஆத­ர­வா­ளர்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர்.