புதுடெல்லி: உலகின் உயரமான ரயில்வே மேம்பாலம் காஷ்மீரில் அமைய உள்ளது. இதற்கான பணிகள் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் உயரத்தில், செனாப் ஆற்றின் மீது இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும்.
இந்தப் பாலம் கட்டப்பட்டபின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 1.3 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்தப் பாலம் ரிக்டர் அளவில் 7 புள்ளிக்கும் அதிகமாகப் பதிவாகும் நில நடுக்கத்தைத் தாங்கக்கூடிய அளவுக்கு உறுதியான பாலமாக அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.