மும்பை கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் மரணம்

மும்பை கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் மரணம்

1 mins read
45894e46-71cc-45c9-b896-e8db74151018
-

சீட்டுக்கட்டு போல் திங்கட்கிழமை இரவு மும்பையின் மாஹாட் பகுதியில் சரிந்து விழுந்த ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டடத்திலிருந்து நேற்று 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட போது, கூடியிருந்தோர் கைதட்டினர். இருப்பினும் குறைந்தது 10 உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக நம்பப்படுவதால் அதிகாரிகள் இரவுபகலாக தங்களின் மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படம்: ஏஎஃப்பி