காவலரே சிறுமியைச் சீரழித்தார்

காவலரே சிறுமியைச் சீரழித்தார்

1 mins read
1c9eaaaf-4be2-48ac-ae6c-95eaa04c3d7c
படம்: ஏஎப்பி -

டேராடூன்: பார்வைக் குறைபாடுடைய 11 வயது சிறுமியைக் கழிவறையில் வைத்து போலிஸ் ஒருவரே சீரழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்தது.

கடந்த ஞாயிறன்று பிற்பகலில் அந்தச் சிறுமி கழிவறைக்குச் சென்றார். வெகுநேரமாகியும் தம் மகள் திரும்பாததைக் கண்டு, அங்கு சென்ற அவளது தாயார் பலமுறை அழைத்தும் பதில் வரவில்லை.

கதவு உள்ளிருந்து தாழிடப்பட்டு இருந்ததை அவளது தாயார் கண்டார்.

திடீரென கதவைத் திறந்து, ஆடவர் ஒருவர் ஓடினார். அதை அடுத்து, கழிவறைக்குள் சென்று பார்த்தபோது தம் மகள் மயங்கிய நிலையில் இருந்ததை அப்பெண் கண்டார். பின்னர் சம்பவம் குறித்து போலிசுக்குத் தகவல் தரப்பட்டது. அப்பகுதியிலேயே வசிக்கும் சஞ்சய் ஜுகாதி என்ற காவலரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவர, போலிசார் அவனைக் கைது செய்து, சிறையில் தள்ளினர்.