கடன் அடைப்பதற்காக தன் வீட்டிலேயே கைவரிசை

கடன் அடைப்பதற்காக தன் வீட்டிலேயே கைவரிசை

1 mins read
c10a1ee7-f7fc-43fa-b7e0-3f00b8145c32
-

புதுச்சேரி: கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்காக ஆடவர் ஒருவர் சொந்த வீட்டிலேயே நகைத் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியது.

தமிழ்ச்செல்வன் என்ற அந்த ஆடவர் தன் மனைவி, பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி நாளன்று யாருமில்லாத நேரம் பார்த்து தன் பெற்றோர் வீட்டில் புகுந்து கள்ளச்சாவி போட்டு ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை அவர் களவாடிச் சென்றார்.

பூட்டை உடைக்காமலேயே களவுபோனதால் தமிழ்ச்செல்வன் மீது போலிசார் ஐயம் கொண்டனர். சிசிடிவியில் தென்பட்ட ஆடவர் அணிந்திருந்த சட்டையும் போலிசார் வந்திருந்தபோது தான் வீட்டில் கழற்றிப் போட்டிருந்த சட்டையும் ஒன்றாக இருக்கவே, தமிழ்ச்செல்வன் பிடிபட்டார்.