செய்தியாளர் சுட்டுக் கொலை; உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா

செய்தியாளர் சுட்டுக் கொலை; உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா

1 mins read
1460cd74-9b0a-414d-bf65-d55178c31c3e
பிரியங்கா காந்தி. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரத்தன் சிங், 42, என்ற தொலைக்காட்சி செய்தியாளர் அடையாளம் தெரியாத சிலரால் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

சொத்துத் தகராறே இதற்குக் காரணம் என போலிஸ் கூறுகிறது. ஆனால், ரத்தன் சிங்கின் குடும்பத்தினர் இதை மறுத்துள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களின் சுதந்திரத்திலும் பாதுகாப்பிலும் உ.பி. மாநில அரசு அக்கறை செலுத்துவதில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

"கடந்த மூன்று மாதங்களில் செய்தியாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 11 செய்தியாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ரத்தன் சிங்கின் கொலை தொடர்பில் போலிஸ் மூவரைக் கைது செய்துள்ளனர்.