சம்பளத்தைக் குறைத்ததால் முதலாளியைக் கொன்றார்

சம்பளத்தைக் குறைத்ததால் முதலாளியைக் கொன்றார்

1 mins read
b4ffaf7f-c790-4921-a2b9-ff912dbd1a0b
-

புதுடெல்லி: சம்பளத்தைக் குறைத்த முதலாளியை ஊழியரே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் புதுடெல்லியில் நிகழ்ந்தது.

பால் முகவராக இருந்த ஓம் பிரகாஷ், 45 என்பவரிடம் தஸ்லீம், 21, என்ற இளையர் பணியாற்றி வந்தார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா காரணமாக தொழில் சரிவர நடக்காததால் தஸ்லிமின் ஊதியத்தை ஓம் பிரகாஷ் குறைத்துள்ளார். இதன் தொடர்பில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அப்போது, ஓம் பிரகாஷ், தஸ்லிமை அறைந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தஸ்லிம், ஓம் பிரகாஷ் தூங்கியபோது அவரது தலையைக் கட்டையால் தாக்கியும் கழுத்தில் வெட்டியும் கொன்றார். பின்னர், அவரது உடலை ஒரு சாக்குப் பையில் கட்டி, அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு, தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில், கிணற்றிலிருந்து துர்நாற்றம் வர, அதைச் சுத்தம் செய்தபோது ஓம் பிரகாஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கடைசியாக அவருடன் தஸ்லிம் இருந்ததைப் பார்த்ததாகச் சிலர் கூறியதை அடுத்து, போலிசார் தீவிரமாகத் தேடி அவரைக் கைது செய்தனர். விசாரணையில் ஓம் பிரகாஷை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.