மகாராஷ்டிரா கட்டட விபத்தில் 16 பேர் பலி சிறுவன் உயிரோடு மீட்பு

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் 16 பேர் பலி சிறுவன் உயிரோடு மீட்பு

2 mins read
db7c556d-4546-4598-9a60-2e0c838a1cac
உயிரோடு மீட்கப்பட்பட்ட நான்கு வயது சிறுவன். -
multi-img1 of 2

மும்பை: மகாராஷ்டிராவில் ஐந்து மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு வயது சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டான்.

சுமார் அறுபது பேர் வரை புதைந்திருக்கலாம் என அஞ்சப்படும் இந்தக் கட்டட விபத்தின் இடிபாடுகளிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை பலத்த கைத்தட்டலுடன் சிறுவன் வெற்றிகரமாக மேலே கொண்டு வரப்பட்டான்.

மும்பைக்குத் தெற்கே ராய்காட் மாவட்ட மகாட்டில் உள்ள காஜல்புரா பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடம் உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு ஏழு மணி அளவில் இடிந்து தரைமட்டமானது

நாற்பது வீடுகளைக் கொண்ட இந்த கட்டடத்தில் சுமார் 200 பேர் வசித்து வந்ததால் பலர் உயிரோடு புதைந்திருக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் சுமார் 20 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து உள்ளூர் போலி சார், தீயணைப்பு வீரர்களுடன் மும்பை, புனேயில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடு பட்டனர். மோப்ப நாய்களைக் கொண்டும் உயிரோடு இருப்பவர் களைத் தேடும் பணி ேமற்கொள்ளப் பட்டது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் பிணமாக மீட்கப்பட்டனர் என்று பேரிடர் மீட்புப்படையினர் கூறினர். ஒருவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். இவரையும் சேர்த்து பலி எண்ணிக்கை நேற்று வரை 16ஆக அதிகரித்தது. எட்டுப் பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சம்பவம் நடந்தபோது பலர் கடைகளுக்குச் சென்றிருந்தனர். மேலும் சிலர் கிருமிப்பரவல் அச்சம் காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். இதனால் உயிர்ச் சேதம் குறைந்தது. கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட முஸ்தபா சஃபேகர், "நிலநடுக்கம் போல இருந்தது," என்றார்.

"உடனே நானும் எனது குடும்பத்தினரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்துவிட்டோம். அடுத்த சில நிமிடங்களில் எங்கள் கண் முன்னாடியே கட்டடம் இடிந்து விழுந்தது," என்று உயிர்தப்பிய 39 வயது முஸ்தபா சொன்னார்.

இதற்கிடையே இடிபாடுகளில் இனிமேலும் யாரும் சிக்கியிருக்க வாய்ப்பு இல்லை என்று மீட்புப் படையினர் நேற்று தெரிவித்தனர்.