கல்வான் மோதல் துரதிர்ஷ்டவசமானது என்கிறது சீனா

புதுடெல்லி: இந்தியாவின் எல்லையோர கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் துரதிர்ஷ்டவசமானது என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டோங் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மோதலில் இருபது இந்திய ராணுவ வீரர்கள் உயிரி ழந்தனர். ஆனால் சீனாவுக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

இம்மாதம் 15ஆம் தேதி நடை ெபற்ற இந்திய-சீன இளையர் கருத்தரங்கில் தூதர் வெய்டோங் பேசினார்.

இந்தியாவும் சீனாவும் பழைய மனப்போக்கை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

எல்லையோர மோதலைத் தவிர்ப்பதற்காக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

“இந்தியாவும் சீனாவும் விரும்பாத மோதல் எல்லையோரம் நடைபெற்றுள்ளது. இதனை முறையாக கையாள பேசி வருகிறோம். அண்டைய நாடுகளான சீனாவும் இந்தியாவும் அமைதியைக் கடைப்பிடித்து சச்சரவுகளை தவிர்க்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே இந்தியா, எல்லையோரமுள்ள லடாக் பகுதி களுக்கு தோளில் வைத்து பாய்ச்சக்கூடிய ஏவுகணைகளுடன் துருப்புகளை அனுப்பி வைத்து உள்ளது.

இத்தகைய ஏவுகணைகள் இரண்டு முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பாயக் கூடியவை.

இதனால் எல்லையோரம் தாழ் வாகப் பறக்கும் ஹெலிகாப்டர் களையும் விமானங்களையும் ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்த முடியும்.

கிழக்கு லடாக்கில் ராணுவம் மற்றும் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. இந்தியா கடந்த சில வாரங்களாக விமானத் தற்காப்பு முறையை வலுப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே முக்கிய ராணுவத் தளங்களுக்கு ‘சுகோய்’, ‘மிராஜ்’ போர் விமானங்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!